மகள் வேற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதால் மனமுடைந்த தாய், தந்தையர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை, சங்கரம்மாள் தம்பதி. விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகள் பேச்சியம்மாள், பேச்சியம்மாளுக்கும் பக்கத்து ஊரான புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காளிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பேச்சியம்மாள் தனது காதலன் காளிமுத்துவுடன் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்
இதனால் மனமுடைந்த சின்னத்துரை மற்றும் சங்கரம்மாள் நேற்றிரவு வீட்டில் சங்கரம்மாள் தூக்கிடும் சின்னத்துரை விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.