தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதியில் கார் ஓட்டி பழகியபோது விபரீதம்; சைக்கிளில் சென்ற சிறுவன் பலி
undefined
அப்போது தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் தூத்துக்குடி பூபால் ராயபுரம் பகுதியை சேர்ந்த ரீகன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த வெள்ளை நிறத்திலான பவுடர் பாக்கெட்டுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது ஹெராயின் போதைப் பொருள் என்ற பெயரில் உப்பு மற்றும் யூரியாவை கலப்படம் செய்து இளைஞர்களிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து தலா 1 கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவற்றை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே அது உண்மையான ஹெராயின் போதைப் பொருள் தானா, அல்லது ஹெராயின் போன்ற நிறத்திலான கலப்படப் பொருளா என்பது தெரிய வரும். மேலும் அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
நடத்தையில் சந்தேகம்; நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்
ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இளைஞர் ஒருவர் ஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.