கோவில்பட்டி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்

Published : Jan 23, 2023, 12:05 PM ISTUpdated : Jan 23, 2023, 12:06 PM IST
கோவில்பட்டி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்

சுருக்கம்

கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம் அருகே கோவிலுக்குச் சென்று திரும்பிய கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காந்தி நகரை சேர்ந்த பாண்டி கனி என்பவர் தனது குடும்பத்தினருடன்  இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு காரில் திரும்பியுள்ளார். காரை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ஓட்டியுள்ளார். எட்டயபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

சிசிடிவி கேமரா அமைத்து கொடுத்த திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்

இந்த விபத்தில் வேம்பாரைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரது மனைவி அழகேஸ்வரி (வயது 19) 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த பாண்டி கனி, சரஸ்வதி, மாரிச்செல்வம் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

காதல் திருமணம் செய்ததற்காக 3 ஆண்டுகள் பேசாத பெற்றோர்; விரக்தில் பெண் தற்கொலை

தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த பாண்டி கனி, அழகேஸ்வரியை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக 3 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!