தகவல் உரிமை சட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே போடப்படாத பேவர் பிளாக் சாலைக்கு ரூ.5.4 லட்சம் பொய் கணக்கு காண்பித்து கையாடல் செய்த ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் 25 கி.மீ. தொலைவில் உள்ளது இ.வேலாயுதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தென்புறப்பாதை 180 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் போடப்படாத சாலைக்கு போடப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வந்த தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மீரான் பாளையம் தெருவை சேர்ந்த முத்து செல்வம் என்பவர் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மந்தை ஊராட்சியில் இ.வேலாயுதபுரம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தென் பகுதியில் உள்ள மேல தெருவில் மயான பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ள விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு இருந்தார்.
undefined
அதாவது, இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்குப் பகுதியில் உள்ள மேல தெருவில் மயான பாதை அமைக்க 5.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும். அச்சாலை தென்புற பாதையில் 180 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலத்தில் போடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கபட்டு உள்ளது.
இ.சி.ஆர் தென்புற பாதையானது பேவர் பிளாக் சாலை 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் 2020 -21 திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விவரங்களை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அந்த சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதுபோன்ற சாலை அமைக்கபடவில்லை எனவும் கம்புகள், குத்து கற்கள் மட்டும் நடப்பட்டுள்ளதாகவும் தெதரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.