சாலையோரம் படுத்திருந்த இளம் பெண்ணின் 4 மாத குழந்தை கடத்தல்; தூத்துக்குடியில் குழந்தை கடத்தல் கும்பல் கைவரிசை?

By Velmurugan s  |  First Published Mar 9, 2024, 2:18 PM IST

தூத்துக்குடியில் அந்தோணியார் கோயில் அருகே வி இ ரோட்டில் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் 4 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று நுழைந்து குழந்தைகளை கடத்தி வருவதாக  சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருவதால் கைக் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார் கோவில் அருகே வி இ ரோட்டில் வேலூரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட. சந்தியா என்ற இளம் பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது 4 மாத கைக்குழந்தையுடன் சாலையில் தங்கி யாசகம் பெற்று வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கி கிடக்க வேண்டும் என்பதற்காக சிலிண்டர் விலை குறைப்பு? கனிமொழி கேள்வி

இதனிடையே நேற்று இரவு சந்தியாவும், அவரது நான்கு மாத குழந்தையும் சாலை ஓரத்தில் படுத்து உறங்கி உள்ளனர். இன்று காலை சந்தியா எழுந்து பார்க்கும் போது அவருடன் படுத்து இருந்த 4 மாத கைக்குழந்தை காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. சந்தியா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை 3 மணி அளவில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் பெண் குழந்தையை கடத்திச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி; அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மயிலாபூரில் சிறப்பு பிரார்த்தனை

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சந்தியாவிடம் விசாரணை நடத்தி குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 4 மாத கைக்குழந்தையை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மர்ம  கடத்திச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே  அச்சத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!