கிராமங்களில் கல்வியின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக சிறுசிறு கிராமங்களை கண்டறிந்து புதியதாக பள்ளிக்கூடங்கள் கட்டி தரப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழனோடை கிராமத்தில் ரூ.21 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா ராதாபுரம் ஊராட்சியில் நடைபெற்றது. விழாவி்ல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கூட்டுறவு நியாயவிலை புதிய கட்டிடங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிராமங்களில் கல்வி தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக சிறுசிறு கிராமங்களை கண்டறிந்து புதியதாக பள்ளிக்கூடங்கள் கட்டித்தரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின்.
undefined
பட்டாசு கிடங்கில் அதிகாரிகள் ஆய்வின் போது வெடி விபத்து; 3 பேர் படுகாயம்
இந்த ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்டணமில்லாமல் பெண்கள் பேருந்தில் இலவச பயணம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதிகளில் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் துணைசபாநாயகர் கு.பிச்சாண்டியோ, நானோ எங்களது குடும்பங்களுக்கு ரூ.1000 கொடுக்க வேண்டுமென்றால் நியாயமா? தகுதியுள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்றார். மேலும் அவர் பேசுகையில் பொது விநியோக கடையை பெண்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில தாழ்ந்துள்ளவர்களுக்கு ரேஷன் கடையின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65வயது முதியவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் 7.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் 1682 நியாயவிலை கடைகள் உள்ளன. இங்கே நல்லவன் பாளையம் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் எனது தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக கூட்டுறவு நியாயவிலை கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. இந்த நல்லவன்பாளையம் ஊராட்சியில் அதிகரேஷன் கடைகள் உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.