திருவண்ணாமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சேலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தது. பேருந்து திருவண்ணாமலை அடுத்த அத்தியேந்தல் அருகில் வரும்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருக்கும் தடுப்பு சுவற்றில் மோதி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
undefined
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
இதில் 15க்கும் மேற்பட்டோருக்கு கை கால் முறிவு மற்றும் காயங்களுடன் அலறி துடித்தனர். உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
குறிப்பாக இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.