திருவண்ணாமலை அருகே அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த தண்டரை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளியில் அண்டை கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு உணவாக சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சர்க்கரைப்பொங்கலை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், சில மாணவர்கள் மட்டும் சர்க்கரைப்பொங்கலில் பல்லி இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக இதனை தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியரும் யாரும் சர்க்கரை பொங்கலை சாப்பிட வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு புகார் கூறிய 5 மாணவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
undefined
தமிழ்நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றியவர் காமராஜர் : அமைச்சர் நேரு பெருமிதம்!!
ஆனால், பள்ளியில் இருந்த சுமார் 80 மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுக்கத் தொடங்கினர். இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் 5 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.