பேருந்தில் உள்ளே வரச்சொன்ன நடத்துநரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய அரசுப்பள்ளி மாணவர்

Published : Jul 14, 2023, 09:57 AM IST
பேருந்தில் உள்ளே வரச்சொன்ன நடத்துநரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய அரசுப்பள்ளி மாணவர்

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த நிலையில், உள்ளே வரச்சொன்ன நடத்துநரை மாணவர் ஆபாசமாக திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையின் சார்பில் பள்ளி நேரத்திற்கு செங்கம் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்காக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

செங்கத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதி வரையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மோடிக்கு திமுக செய்ததை திருப்பி கொடுக்கும் பாஜக.! ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு பலூன், கருப்பு சட்டை- அண்ணாமலை

காலியாக பேருந்து சென்றாலும் பேருந்துக்குள் அமர்ந்து செல்லாமல், பேருந்தின் படியில் நின்று ஒரு காலை கீழே தேய்த்தபடி கூச்சலிட்டு, கும்மாளமடித்து மாணவர்கள் செல்வதால் பேருந்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துநருக்கும் விபத்து ஏற்பட்டு விடுமோ என  அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம் மேற்கொள்கின்றனர். 

ஆபத்தை அறியாமல் படியில் நின்றபடி பயணம் செய்த மாணவனை ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்திற்குள் வரும்படி அழைத்ததால் ஆத்திரமடைந்த மாணவன் ஆபாசமான வார்த்தைகளால் ஒருமையில் பேசியும், ஓட்டுநர், நடத்துநரை மிரட்டும் தொணியிலும் நடந்து கொண்டது பேருந்தில் பயணம் செய்பவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து வலைதளங்கள் மூலம் தற்போது இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

கலைஞரின் எழுத்துகளை படித்தால் மட்டும் தான் எதிர்கால தமிழ் சமுதாயம் முன்னேறும் - ஆ.ராசா பேச்சு

யாருக்கும் அடங்காத மாணவர்கள் தற்போது ரௌடிகள் போல் நடந்து கொள்வதும் ஓட்டுநர் நடத்துநர்களை மிரட்டுவதும் மாணவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொண்டு படிப்பு பற்றியும் விபத்தை பற்றியும் அக்கறை கொள்ளாமல் தான் போன போக்கில் செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறையும், காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?