திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டுவரப்பட உள்ள ரூ.300 கட்டண தரிசனம், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவிலில் கொண்டு வரப்பட உள்ள 300 ரூபாய் கட்டணத்தில் தரிசனம் செய்யும் இடைநிறுத்த தரிசனத்தை ரத்து செய்யக் கோரியும், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் உள்ளூர் பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளதால் அவர்களுக்கு என தனி வரிசை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
மேலும் கோவிலை சுற்றி அகற்றப்பட்ட பலிபீடங்களை மீண்டும் அதே இடத்தில் அமைக்க கோரியும், பக்தர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில் கட்டண தரிசன டிக்கெட்டை ரத்து செய்யக் கோரியும், மேலும் திருக்கோவிலில் ஆகம விதிப்படி பிரசாதங்களை தயார் செய்ய வலியுறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் சில இந்து அமைப்புகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.