மலேசியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பத்குமார் உடலை பெற்றுத்தரக்கோரி அவரது குடும்ப உறுப்பினர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம், படவேடு மதுரா ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரா.தேசிங்கு (வயது 60). தந்தை மற்றும் உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேசை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கி முறையிட்டனர். இந்த மனுவில் தனது மகன் சம்பத்குமார் (37) பொறியியல் பட்டதாரி. இவருக்கு திருமணமாகி ரேணுகா (32) என்ற மனைவியும் ஸ்ருத்திகா (7) என்ற மகளும் வேதாந்த் (4) மகனும் யாசிகா (2) என்ற மகனும் என 3 குழந்தைகள் உள்ளனர்.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் மிகவும் வறுமை நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு வேலைதேடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியா சென்றார். மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 11 மாதங்களாக வேலை செய்து வந்தார். தினமும் எங்களுக்கு தொலைபேசியில் பேசிவந்தார். கடந்த 28ம் தேதி காலை 8.30 மணியளவில் நல்லமுறையில் எனது மகன் சம்பத்குமார் பேசினார்.
ஹேர் கிளிப்பை விழுங்கிய குழந்தை; அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
இந்நிலையில் கடந்த 29ம் தேதி காலை 8 மணியளவில் சந்தவாசல் கிராமம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்னிடம் பேசியபோது உங்களது மகன் சம்பத்குமார் மலேசியாவில் உயிரிழந்துவிட்டதாக மலேசியாவிலிருந்து பேசியவர்கள் தெரிவித்தனர் என்றார். இந்நிலையில் தன்னுடைய மகன் சம்பத்குமார் மலேசியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். எந்தவிவரமும் எங்களுக்கு தெரியவில்லை.
செல்பி மோகத்தால் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி 2 இளைஞர்கள் பலிஷ
எனவே தயவு செய்து தங்களது மகனை மலேசியா நாட்டிலிருந்து பெற்றுதரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் முறையிட்டுள்ளோம். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பத்குமாரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.