திருவண்ணாமலை அருகே கோர விபத்து... லாரி - கார் நேருக்கு மோதல்.. 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

By vinoth kumar  |  First Published Oct 15, 2023, 10:52 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பைபாஸ் சாலையில் பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் திருவண்ணாமலை நோக்கி லாரி வந்துக்கொண்டிருந்தது. 


திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பைபாஸ் சாலையில் பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் திருவண்ணாமலை நோக்கி லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்ற மற்றொரு காரை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

Latest Videos

இதையும் படிங்க;- பால் கொடுக்க வந்த இடத்தில் ஆன்டியை கரெக்ட் செய்து உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள், 4  பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- கார் மீது லாரி நேருக்கு நேர் மோதல்.. 3 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

 இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!