நான் கடவுள் சினிமா பாணியில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட சிறுவர்கள்; அதிகாரிகள் அதிரடி

Published : Sep 29, 2023, 04:17 PM IST
நான் கடவுள் சினிமா பாணியில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட சிறுவர்கள்; அதிகாரிகள் அதிரடி

சுருக்கம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 14 சிறுவர்களை மீட்ட காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் கிரிவலப் பாதையில் சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் பக்தர்களிடம் யாசகம் பெற்று 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அமர்ந்து யாசகம் எடுப்பது வழக்கம். 

இதனை ஒரு சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மற்றும் வெளி மாநில சிறுவர்களை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்து அதிலிருந்து வருவாய் ஈட்ட  திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கிரிவலப் பாதையில் பௌர்ணமி தினங்களில் பல்வேறு மாவட்ட, மாநில சிறுவர்கள் அதிக அளவில் பிச்சை எடுப்பதை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கண்காணித்து வந்தது.  

தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆப்பிளை நருக்கி கொடுத்து 40 சவரன் நகை கொள்ளை; மைத்திலிக்கு போலீஸ் வலை?

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமி நேற்று மாலை 6.46 மணிக்கு தொடங்கி இன்று மாலை 04.34 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த கும்பல் 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் பிரித்து பிரித்து பிச்சை எடுக்க வைத்துள்ளதாக திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கிரிவலப் பாதையில் காவல்துறையினர் மற்றும் சமூக நல அலுவலர்கள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் மதுரை,சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மோரணம், மற்றும் தெலங்கானா பகுதிகளைச் சேர்ந்த 9 சிறுமிகள், 5 சிறுவர்கள் என 14 சிறுவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. கிரிவலப் பாதையில் குழந்தை, சிறுவர், சிறுமிகளிடம் பேசுவது அவர்களை அழைத்து வந்த இடைத்தரகர்கள் காவல்துறையினரை கண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஆயிரம் ரூபா பணம் வரலிங்க ஐயா; முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைத்த பெண்கள் - அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு

இதனைத் தொடர்ந்து 14 சிறுவர்களை மீட்ட காவல்துறையினர் பெரும்பாக்கம் சாலையில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்று பத்திரமாக ஒப்படைத்தவுடன் தப்பியோடிய இடைத்தரகர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவர்களை யார் பிச்சை எடுக்க அழைத்து வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிறுவர்கள் அனைவரையும் பொம்மை, மாலை உள்ளிட்ட பொருட்களை கிரிவலப் பாதையில் விற்பதற்காக அழைத்து வந்து பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?