இன்ஸ்டா காதல் ஜோடிக்கு பெற்றோர் எதிர்ப்பு; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

Published : Oct 03, 2023, 06:11 PM IST
இன்ஸ்டா காதல் ஜோடிக்கு பெற்றோர் எதிர்ப்பு; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அண்மையில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். தொழிற்படிப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சௌமியா.

பூவரசன், சௌமியா இருவருக்கும் இணையதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பூவரசன் மற்றும் சௌமியா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.

உறவினருடன் சண்டையிட்டு வெளியேறிய இளம்பெண்; நம்பவைத்து ஆசையை தீர்த்துக்கொண்ட காமுகன்கள்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவர்களது திருமணம் பெண் வீட்டாரருக்கு தெரிய வந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இவர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புதுமண காதல் ஜோடி தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் தங்களது வீட்டில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

திடீரென ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி; சாதுர்யமாக மூதாட்டியை காப்பாற்றிய பெண் கேட் கீப்பர்

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு புதுமண காதல் ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?