அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அப்பகுதியில் சிறந்த மருத்துவ சேவையை அளித்து வருவதாகப் பெயர் பெற்றுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்களும் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
சந்தியரான்-3 லேண்டர், ரோவர் வெடித்து சிதறப் போகிறதா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
இந்நிலையில் சிறப்பாக இயங்கிவரும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்க இருக்கிறார்.
கட்டட திறப்புக்குப் பின்பு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்யும் முதல்வர், பின்னர் திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் இன்று நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேச உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 13,000 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ரூம் போட்டு யோசித்து தீர்த்துக் கட்டிய கணவன்! உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!