தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
கனமழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க;- Chennai Heavy Rain : சென்னையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்.!
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன?
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.