திருவண்ணாமலையில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Velmurugan s  |  First Published Jun 19, 2023, 9:28 AM IST

திருவண்ணாமலையில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40). இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் செந்தில் குமாரும், அவரது மகளும் தனியாக வசதித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது மகளிடம் செந்தில் குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். தொடர்ந்து அவ்வபோது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அவரிடம் நடந்த பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மாணவி கூறிய தகவல்களைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (04.05.2022) அன்று புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொட்டிய மழை.. 2k கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள் எப்படி.? வெதர்மேன் விளக்கம்

வழக்கு தொடர்பான விசாரணை ஆரணி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஆடுபட்ட குற்றத்திற்காக செந்தில் குமருக்கு ஆயுள் தண்டனையும், சிறுமியை கொலை செய்வதாக மிரட்டியதற்கு கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

click me!