Viral Video : தனியார் ஹோட்டலில் 4 வயது குழந்தை மது அருந்தும் நபர்களுடன் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சி!

By Dinesh TGFirst Published May 26, 2023, 6:23 PM IST
Highlights

4 வயது குழந்தையை மதுபான கூட்டத்திற்குள் அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம் மீது, அழைத்து வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதை தடுப்பதற்காக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் மதுபானம் குடித்து இருவர் இறந்த நிலையில் மதுபான கூட்டங்களில் அனுமதி இல்லாமல் பார் நடத்துவது பார் அனுமதி நேரத்தை மீறி நடவடிக்கை என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது.

குறிப்பாக 21 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் மதுபான கூடங்களுக்குள் உள்ளே அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் பிரபலமான நளா என்ற மதுபானக்கூடம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இரவு 10 மணி தாண்டி 12 மணி வரை இந்த மதுபான கூடம் செயல்படுவதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 4 வயது மகனுடன் அவரது தந்தை உள்ளே சென்று மகனை அமர வைத்துவிட்டு தனது நண்பர்களுடன் மதுபானக் கூடத்தில் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாட்டின் வருங்கால இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில் தமிழக அரசு கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே மதுபான கூடங்கள் அமர வேண்டும் மது கொடுக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் கட்டுப்பாடுகளை மீறி 4 வயது சிறுவனை மதுபான கூடத்தில் அனுமதி அளித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விசாரணை நடத்தி 4 வயது குழந்தையை மதுபான கூடத்தில் அனுமதித்த நளா ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

click me!