தாலியை லஞ்சமாக கொடுத்து தந்தையின் இறப்பு சான்றிதழை கேட்ட பெண்.. வைரலாகும் வீடியோ..!

Published : May 13, 2023, 12:07 PM IST
தாலியை லஞ்சமாக கொடுத்து தந்தையின் இறப்பு சான்றிதழை கேட்ட பெண்.. வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் திலகவதி (40). இவரது கணவர் இறந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். 

தந்தையின் இறப்பு சான்று கேட்டு அலைகழித்ததால் தன்னிடமிருந்த இருந்த தாலியை பெண் கழற்றி லஞ்சமாக கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் திலகவதி (40). இவரது கணவர் இறந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில், அவரது மகள் திலகவதி கடந்தாண்டு ஜுன் மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மனுவை அதிகாரிகள் பரிசீலிக்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். 

அந்த மனுவை தொடர்பாக  அலுவலகத்தில் சென்று கேட்டால் மீண்டும் வருவாய்த்துறையினர் அலுவலகத்தில் சென்று கேட்கும் படி மாறி மாறி அலை கழிப்பதால் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்குமோ என்கிற மனநிலைக்கு திலகவதி வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னிடம் பணம் ஏதும் இல்லாததால் தன்னிடமிருந்த தன் தாலி மற்றும் கம்மலை கழற்றி அங்கிருந்த அரசு ஊழியர்களிடம் லஞ்சமாக கொடுத்து இதன் பிறகாவது தனது தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்குமாறு கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவளைதலங்களில் வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் புதியதாக ஒரு மனுவை திலகவதியிடம் பெற்று கொண்டு நடவடிக்கை எடுத்தப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?