அம்மா இல்லத்தை இடித்த அதிமுக நிர்வாகிகள்.! அதிமுகவினர் அதிர்ச்சி.. திருவண்ணாமலையில் பரபரப்பு சம்பவம் !

By Raghupati R  |  First Published Jun 1, 2022, 12:30 PM IST

திருவண்ணாமலையில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக நிர்வாகிகளே ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை அதிமுக

திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே .ராஜனின் அதிமுக அலுவலகம் அமைந்துள்ளது.  கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு அதிமுக அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில்,  இங்கு இளைஞர்களுக்கு கணினி பயிற்சி கூடம், தையல் பயிற்சி கூடம், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு அருந்தும் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

கே. ராஜன் வாடகைக்காக ஒப்பந்தம் எடுத்து அலுவலகம் நடத்திவந்தார். இந்த  இடத்தின் உரிமையாளர் இடத்தை அதிமுக பிரமுகர் சஞ்சீவி ராமன் என்பவரிடம் விற்பனை செய்துள்ளார் . தற்போது பெருமாள் நகர் கே.ராஜன் வெளிநாடு சென்றுள்ள நிலையில்,  எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று சஞ்சீவி ராஜன் அத்துமீறி அதிமுக பிரமுகரின் அலுவலகத்தை தரைமட்டமாக இடித்து தள்ளியுள்ளார்.  

அம்மா இல்லம் இடிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து இன்று காலை  பெருமாள் நகர் கே. ராஜன் ஆதரவாளர்கள் இடிக்கப்பட்ட அதிமுக அலுவலகம் முன்பு இருந்த ஜேசிபி மற்றும் லாரிகளை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலையை காவல்துறையினர் அத்துமீறி அலுவலகத்தை இடித்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?

click me!