திருவண்ணாமலையில் பிரியாணி பிரதர்ஸ் அசைவ உணவகத்தில் சமைக்க வைத்து இருக்கக்கூடிய பொருட்களை எலி ருசிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பிரியாணி பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிரியாணி பிரதர்ஸ் அசைவ உணவகத்தில் சமைக்க வைத்து இருக்கக்கூடிய பொருட்களை எலி ருசிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பிரியாணி பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பிரியாணி பிரதர்ஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும். அனைத்து தரப்பு மக்களும் உணவு அருந்த வந்து செல்லும் நிலையில் உணவு பொருட்களின் மீது எலிகள் எறி ருசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த உணவகத்தில் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.