பள்ளியில் சேர்ந்த முதல் நாளே பயங்கரம்.. பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய LKG மாணவன்.. தலை நசுங்கி பலி.!

Published : Mar 18, 2022, 08:18 AM IST
பள்ளியில் சேர்ந்த முதல் நாளே பயங்கரம்.. பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய LKG மாணவன்.. தலை நசுங்கி பலி.!

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. நெசவு தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களின் மகன் விக்னேஷ் (8) வாழைப்பந்தல் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான். 2வது மகன் சர்வேசை (4) நேற்று மதியம் அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். 

திருவண்ணாமலை கொருக்காத்தூரை சேர்ந்த 4 வயதான மாணவர் சர்வேஷ் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளியில் சேர்ந்த முதல் நாளே விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. நெசவு தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களின் மகன் விக்னேஷ் (8) வாழைப்பந்தல் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான். 2வது மகன் சர்வேசை (4) நேற்று மதியம் அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். 

பள்ளியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பியுள்ளனர். வேனை பள்ளி உரிமையாளரே  ஓட்டி சென்றுள்ளார். வீட்டு அருகே வேன் வந்து நின்ற போது 2 பேரும் கீழே இறங்கியுள்ளனர். அப்போது, சர்வேஷ் வேனின் முன்பக்கம் சென்றுள்ளார். 

துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்

இதையறிந்த அவனது அண்ணன் விக்னேஷ் சத்தமிட்டுள்ளார். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியுள்ளார். அப்போது,  சர்வேஷின் தலையில் முன்சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் வேனை அங்கியே நிறுத்தி விட்டு  தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?