நண்பர் வீட்டு கிரக பிரவேத்தில் வீட்டை சுற்றிப் பார்த்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

By Velmurugan s  |  First Published Sep 6, 2023, 4:55 PM IST

சோளிங்கரில் வீடு கிரகபிரவேச நிகழ்ச்சியில் நண்பனின் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பெரிய கடம்பூரை சேர்ந்தவர் கோவர்தனன்( வயது 29). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவர்தனன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த நண்பர் ஒருவரின் வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். 

அப்போது, வீட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்த போது வீட்டின் அலங்காரத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த சீரியல் லைட்டில் தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயர் கோவர்த்தனன் மீது பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tap to resize

Latest Videos

தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை; சொத்து தகராறில் தாய், சகோதரர் வெறிச்செயல்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கோவர்த்தனன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் சோளிங்கர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!