ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Aug 30, 2023, 5:07 PM IST

திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தனது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதாக திமுக பெண் நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பவர் சந்திரன். இவர் மீது திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆசைக்கு இணங்க மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் தன்னுடன் தகாத முறையில் இருக்க ஆசைப்பட்டு மகளிர் அணியைச் சேர்ந்த பெண்களிடம் தன்னிடம் பேச வைக்குமாறு சந்திரன் வற்புறுத்தினார். ஆனால், இதுபோன்ற கேவலமான பிழைப்பு எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டதாக தெரிவித்தார். 

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் கோவில் குடமுழுக்கு; ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கலசங்கள்

அது மட்டுமின்றி திமுகவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் மகளிர் அணிக்கு இது போன்று அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பி உள்ள பெண் நிர்வாகி, இது தொடர்பாக கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து புகார் அளிக்க அறிவாலயம் சென்ற போது அவரை பார்க்க முடியாததால் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் புகார் அளித்ததாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெண் நிர்வாகி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!