எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்... 2 இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழப்பு..!

Published : Nov 27, 2019, 05:45 PM IST
எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்... 2 இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழப்பு..!

சுருக்கம்

திருவொற்றியூர் அருகே ரயில் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர் அருகே ரயில் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திராவை சேர்ந்தவர்கள் குமார் (30), கெங்கப்பன். இவர்கள் இருவரும் திருவொற்றியூர், விம்கோ நகரில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 பேரும் விம்கோ நகர்- கத்திவாக்கம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் 2 பேர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

உடனே இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
Chennai Rain Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!