கூரையைப் பிரித்து கடைக்குள் இறங்கிய கொள்ளையன்..! காவலர்களை குழம்ப வைத்த நூதன திருட்டு..!

By Manikandan S R S  |  First Published Nov 14, 2019, 1:38 PM IST

திருவள்ளூர் அருகே கூரை வழியாக கடைக்குள் இறங்கிய திருடன் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் நூதன திருட்டில் ஈடுபட்ட சம்பவம் நடந்ததுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இருக்கும் காந்திநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அந்த பகுதியில் பல வருடங்களாக பெயிண்ட் கடை வைத்து தொழில் பார்த்து வருகிறார். தினமும் காலையில் கடையை திறக்கும் இவர், இரவு 10 மணிக்கு மேலாக தான் கடையை சாத்துவார் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

சம்பவத்தன்றும் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கல்லாபெட்டியில் 50 ஆயிரம் பணத்தை வைத்திருக்கிறார். பின்னர் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் கூரையை பிரித்து கடைக்குள் இறங்கி பணத்தை திருடிச்சென்றுள்ளார். மறுநாள் வழக்கம் போல கடையை திறந்தவர், பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவலர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

ஆனால் அதில் எதுவும் பதிவாகவில்லை. கூரை வழியாக கடைக்குள் இறங்கிய திருடன், கண்காணிப்பு கேமராவை வேறு பக்கமாக திருப்பியுள்ளான். கொள்ளை அடித்து முடித்த பிறகு மீண்டும் பழைய மாதிரியே கேமராவை வைத்த காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவலர்கள், நூதன முறையில் திருடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல தொழிலதிபர் காருடன் எரித்துக்கொலை..! திருச்சியில் பரபரப்பு..!

click me!