Chennai Floods : திடீர் நெஞ்சுவலி.. 3 அடி வெள்ள நீரில் பெண்ணை பத்திரமாக மீட்ட 108 ஆம்புலன்ஸ்..!

By vinoth kumar  |  First Published Nov 11, 2021, 7:17 PM IST

ஆவடியில் நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள வெள்ள நீரில் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


ஆவடியில் நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள வெள்ள நீரில் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால்,  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடா காட்சியளித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி  வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை காரணமாக வெள்ள நீர் தேங்கியுள்ளது. அங்குள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் வெள்ளக்காடாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், வீட்டில் இருந்த வசந்தா என்ற பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே 108 ஆம்புன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை பாதுகாப்பாக மீட்ட ஆம்புலன்ஸ் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

click me!