திருவள்ளூரில் 2 குழந்தைகளின் தாய் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் செந்தமிழ் நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் சென்னையில் கட்டுமானம் தொடர்பான கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா. வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை மூன்றாம் வகுப்பும் மற்றொரு குழந்தை ஒன்றாம் வகுப்பும் திருத்தணியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த இரண்டு குழந்தைகளையும் ஆஷா தனது தாய் வீடு உள்ள கலைஞர் நகர் பகுதியில் எடுத்துச் சென்று குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் உள்ள வீட்டார் ஆஷா வீட்டுக்கு வெளியே வராததால் கதவு தட்டி பார்த்துள்ளனர். வெகு நேரமாக வராததால் திருத்தணி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
ரூ.7.5 கோடி நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்; நேரில் சென்று வாழ்த்திய எம்.பி.வெங்கடேசன்
அப்போது ஆஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி திருத்தணி போலீசார் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே வார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜை மொத்தமாக காலி செய்த செல்லூர் ராஜூ
ஆஷா, சதீஷ் தம்பதி திருத்தணியில் நிதி நிறுவனம் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் பத்தாயிரம் வட்டி கொடுக்கப்படும் என்று கூறிய நிதி நிறுவனத்தில் அதிக பணம் முதலீடு செய்து இதில் அதிக அளவு ஏமாற்றமடைந்து அந்த கம்பெனி இவர்களை ஏமாற்றியதாகவும் அதில் மிகவும் கடன் சுமை ஏற்பட்டு கணவன், மனைவிக்குள் தொடர்ச்சியாக பிரச்சனை வந்ததே இதற்கு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.