வெந்நீர் கொட்டி 2 குழந்தைகள் பலி... பார்த்து கதறிய தாய்... மனதை பதறவைத்த காட்சிகள்..!

Published : Aug 19, 2019, 12:57 PM IST
வெந்நீர் கொட்டி 2 குழந்தைகள் பலி... பார்த்து கதறிய தாய்... மனதை பதறவைத்த காட்சிகள்..!

சுருக்கம்

பொன்னேரியில் வெந்நீர் கொட்டி படுகாயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொன்னேரியில் வெந்நீர் கொட்டி படுகாயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மனைவி அனிதா (27). கணவர் இறந்த பிறகு காட்டூர் அரசு பள்ளியில் சத்துணவு
அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஸ்ரீதர்ஷித் (4), ஜோஷித் (2) குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், மனோகரனின் தாய் முருகம்பாள் இரண்டு குழந்தைகளோடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலை நேரத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அனிதா குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வாட்டர் ஹீட்டரை போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வாட்டர் ஹீட்டர் சூடாகி டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. தண்ணீர் கொதிக்கும் அதிர்வினால் டேபிள் மேல் இருந்து பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து டேபிளில் இருந்து கீழே விழுந்தது. 

இதில், கீழே படுத்து இருந்த ஸ்ரீதர்ஷித் (4), ஜோஷித் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் மீதும் பயங்கர சூடாக இருந்த தண்ணீர் கொட்டியது. இதில் இருவரின் உடல்களும் வெந்து கொப்புளங்கள் உருவானது. குழந்தைகள் வலி தாங்க முடியாமல் அழுது துடித்தனர். இதனையடுத்து, உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

இந்நிலையில், இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததை கண்டு தாய் மற்றும் பாட்டி ஆகியோர் துடிதுடித்து கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
Chennai Rain Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!