அப்பாவும் பார்க்கல !!.. அம்மாவும் கவனிக்கல !!.. குளியலறையில் மூச்சுத் திணற இறந்த 1 வயது குழந்தை ..

By Asianet Tamil  |  First Published Aug 16, 2019, 1:03 PM IST

குளியலறையில் இருந்த தண்ணீர், 1 வயது  குழந்தையின் மீது கொட்டியதில், மூச்சுத்  திணறி பரிதாபமாக குழந்தை இறந்தது .


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் . இவருக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது . குழந்தையை கணவன் - மனைவி இருவரும் ஆசையாக வளர்த்து வந்தனர் .

இந்த நிலையில் முருகன் தனது மகனை குளிப்பாட்டுவதற்காக குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார் . அப்போது அவரின் தொலைபேசி ஒலித்துள்ளது . அதனால் குழந்தையை விட்டுவிட்டு தொலைபேசியை எடுக்க சென்றுள்ளார் . அவரின் மனைவி சமயலறையில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார் .

Tap to resize

Latest Videos

அப்போது எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் குழந்தை மீது கொட்டியது . இதனால் மூச்சுத்  திணறி மயங்கி கிடந்தது. அதை பார்த்த முருகன் பதறி போய் குழந்தையை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் .அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் , குழந்தை இறந்ததாக கூறினார் .இதனால் முருகனும் அவர் மனைவியும் கதறி அழுதனர் .

1 வயது குழந்தை , பெற்றோர் வீட்டில் இருக்கும் போதே இறந்துபோனது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது ..

click me!