தாராபுரத்தில் காதலன் கண்ணெதிரே காதலி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் காதலன் கண்ணெதிரே காதலி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காந்திபுரத்தை சேர்ந்தவர் மனோஜ். மினி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது சகோதரி அதே ஊரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரது சகோதரியை சந்திக்க சென்ற போது சகோதரியின் தோழியான ராமநாதபுரத்தை சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பட்டப்பகலின் பைக் திருட்டு... சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!
undefined
இதுநாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் காயத்ரி பொங்கல் விடுமுறையையொட்டி காதலன் மனோஜை பார்க்க தாராபுரம் வந்துள்ளார். இருவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல் எதிர்புறம் காயத்ரியை இறக்கிவிட்டு விட்டு ஆச்சியூர் பிரிவு அருகே சென்று வாகனத்தை திருப்பி கொண்டு ஓட்டல் அருகே வந்துள்ளார்.
இதையும் படிங்க: பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்த மக்கள்... வாசலில் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து உற்சாக கொண்டாட்டம்!!
பின்னர் எதிர்புறம் நின்று கொண்டிருந்த காயத்ரியை ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது சாலையை கடந்த காயத்ரி மீது தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மோதியது. இதில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் கண்ணெதிரே காதலி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.