பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பலி..!

By vinoth kumar  |  First Published Dec 27, 2022, 9:51 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம்(42). கூலி தொழிலாளி. இவரது தாய் ரக்ஷிதா பேகம் (55). இவர் தன்னுடைய மருமகள் ஆஷிபா பானு (35), பேத்தி  சஷ்மிதா (10), பேரன் இஸ்மாயில் (14) ஆகியோருடன் உடுமலையில் நடைபெற்ற திருமணத்துக்காக குடும்பத்துடன் வேனில் சென்றிருந்தனர். 


உடுமலை அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம்(42). கூலி தொழிலாளி. இவரது தாய் ரக்ஷிதா பேகம் (55). இவர் தன்னுடைய மருமகள் ஆஷிபா பானு (35), பேத்தி  சஷ்மிதா (10), பேரன் இஸ்மாயில் (14) ஆகியோருடன் உடுமலையில் நடைபெற்ற திருமணத்துக்காக குடும்பத்துடன் வேனில் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் அவரது குடும்பத்தினர் வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Holiday List 2023; 2023ம் ஆண்டுக்கான அரசு, வங்கி விடுமுறை லிஸ்ட்; ஜனவரியில் மட்டும் 6 நாள் லீவு

நரசிங்காபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக  ஓடி எதிரே வந்த டெம்போ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஆஷிபா பானு, ரக்ஷிதா பேகம், சஷ்மிதா மற்றும் டிரைவர் முத்து உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

படுகாயமடைந்த  இஸ்மாயில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட அப்பகுதியினர் உடனே அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!

click me!