ஒருபக்கம் ஊராட்சி மன்ற தலைவி போராட்டம்... மறுபக்கம் வார்டு உறுப்பினர்கள் போராட்டம்… திருப்பூர் அருகே பரபரப்பு!

By Narendran S  |  First Published Dec 7, 2022, 12:35 AM IST

திருப்பூர் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிமன்ற தலைவியும் வார்டு உறுப்பினர்களும் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிமன்ற தலைவியும் வார்டு உறுப்பினர்களும் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கூட்டம் மன்றத் தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது, இதில் வார்டு உறுப்பினர்கள் எட்டு பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள், எதற்காக இரண்டு மாதங்கள் கூட்டம் நடைபெறவில்லை, வார்டு பகுதிகளில் தெரு விளக்கு ,குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேரூர் நொய்யல் ஆறு… கார்த்திகை தீபத் திருநாளையொட்டி வழிபாடு!!

Tap to resize

Latest Videos

இதனால் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இன தலைவர் என்பதால் கூட்டத்தை நடத்த விடாமல் வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்தும், தன்மீது வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கை ஈடுபடுவதாகவும், மக்கள் பணி செய்ய விடாமல் உறுப்பினர்கள் தடுப்பதாகவும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!

ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியிலும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 8 பேர் அலுவலகத்திற்குள்ளேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இரு தரப்பினரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் நேரில் வந்து முறைகேடுகளை ஆய்வு செய்து சரியான நீதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளார். 

click me!