திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பனியன் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் - பல்லடம் அடுத்துள்ள கணபதிபாளையம் அருகே, மலையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்துக் கொண்டு பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரவிக்குமார் கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளார். அன்று மாலை வெளியூரிலிருந்து வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய ரவிக்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது
undefined
உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் வைத்திருந்த 500 ரூபாய் சில்லறை காசுகளும், பீரோவில் வைத்திருந்த ஐந்தாயிரம் ரொக்கமும், இரண்டு தங்க நாணயங்களும் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து அவர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து சென்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் முகமூடி அணிந்து வீட்டினுள் புகுந்த இரண்டு மர்ம ஆசாமிகள் வீட்டினுள் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல் துறையினர் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு இரண்டு முகமூடி கொள்ளையர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.