அவிநாசி அருகே அரசு தொடக்கப் பள்ளிக்குள் குடிபோதையில் புகுந்த திமுக கவுன்சிலரின் கணவர், தலைமை ஆசிரியரை கழுத்தைப்பிடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவிநாசி அருகே அரசு தொடக்கப் பள்ளிக்குள் குடிபோதையில் புகுந்த திமுக கவுன்சிலரின் கணவர், தலைமை ஆசிரியரை கழுத்தைப்பிடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 60க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் மீது கழிவுநீரை ஊற்றியுள்ளார். இதுதொடர்பாக பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வது வார்டு கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமிக்கும் இடையே பள்ளி வளாகத்தில் வாக்குவாதம் நடந்தது. அப்போது, தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு பேசினார். ஒரு கட்டத்தில், தலைமையாசிரியரின் கழுத்தை இறுக்கி பிடித்து தாக்கும் காட்சிகள் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, அந்த வார்டு ஆளுங்கட்சி கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமிக்கும், பெற்றோருக்கும் இடையே, நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் காரசார விவாதம் நடந்தது அப்போது, தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு பேசினார். ஒரு கட்டத்தில், தலைமையாசிரியரின் கழுத்தை பிடித்து இறுக்கி, துரைசாமி தள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.