பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் இன்டர்நெட் மூலம் தனது கல்லூரி தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் இன்டர்நெட் மூலம் தனது கல்லூரி தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பல்லுபோன பாட்டிவரை அனைவரிடமும் இப்போது ஸ்மார்ட் போன் வைத்திருப்பது ஒரு பேஷனாகிவிட்டது. ஒருவரிடம் ஸ்மார்ட் போன் இல்லை என்பது இன்றைய நிலையில் மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால், இந்த போன்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். ஆக்க சக்ததியாக பயன்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை அழிவு சக்தியாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க;- சிவில் தேர்வுக்காக டெல்லி பறந்த மனைவி, இளைஞனுடன் உல்லாசம்.. இரவெல்லாம் கடலை.. கழுத்தை நெறித்து கொலை.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பிரபலமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகள் சிலர் தங்களது புகைப்படங்களை வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் 2 பேரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர்கள் விபச்சாரத்திற்கு அழைத்ததால் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவிகளிடம் பேசிய நபர்கள் யார், இச்செயலில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று தீவிரமாக விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக உடன் படிக்கும் தோழிகளை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க;- 9 வருஷமாக கணவனால் கர்ப்பம் ஆகாத மனைவி கள்ளக்காதலனால் கர்ப்பம்..! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!
அந்த மாணவிக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளனர். மேலும் கல்லூரியில் பல மாணவிகளிடம் சகஜமாக பழகியுள்ளார். அவர் பழகும் விதம் மாணவிகளுக்கு பிடித்தது. இதன் மூலம் மாணவிகள் பலர் அந்த மாணவியிடம் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாணவி அங்கு படித்து வந்த சீனியர் மாணவிகள் 2 பேரின் புகைப்படங்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை தனது ஆண் நண்பர்களுக்கு, மாணவிகளின் செல்போன் எண்களுடன் அனுப்பியுள்ளார். இதன் மூலம் மாணவிகள் 2 பேரை அந்த மாணவியிடன் ஆண் நண்பர்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளதுடன் விலையும் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.