என் புருஷன நினைச்சு தான் நீங்க இரவில் தூங்கணும்.. மாணவிகளை மருமகளாக பாவித்த ஆசிரியைக்கு ஆப்பு..!

By vinoth kumar  |  First Published Sep 30, 2022, 8:28 AM IST

இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.


திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவியை மருமகளாக கூறி மகனிடம் பேச சொல்லி தொந்தரவு செய்த ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம்  உடுமையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் இவர், தனது மகனிடம் செல்போனில் பேசுமாறும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்

மேலும் இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று வன்மத்தை விதைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும்  புகார் அளித்தனர். மாணவிகள் மட்டுமின்றி அவரால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர்களும் சாந்தி பிரியா மீது மாவட்ட உயர் கல்வி அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணையில் குற்றம் உறுதியானதையடுத்து ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;- சம்பாதிக்கிற பணத்தை கள்ளக்காதலியிடம் கொடுத்து உல்லாசம்! கணவர் ஓயாத டார்ச்சர்! ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்

click me!