திருப்பூர் காளப்பட்டி பிரிவு அருகே அசுர வேகத்தில் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பருவாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (19). காளப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இன்று அவரது நண்பரும், அதே கல்லூரியில் பயின்று வரும் கோவை செளரிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீஹரி(19) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பிரவீன்குமார் தனது இருசக்கர வாகனத்தை இயக்க ஸ்ரீஹரி பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டையில் சர்ச்சைக்குள்ளான கோவிலில் சமத்துவ பொங்கல்; ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
undefined
அப்போது, கோவையில் இருந்து அசுர வேகத்தில் வந்த லாரி காளப்பட்டி பிரிவு அருகே பிரவீன் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பிரவீன் குமார் மீது லாரியின் ஏறி இறங்கியது. இதனால் உடல் நசுங்கி பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீஹரி படுகாயமடைந்துள்ளார். மேலும், லாரி மோதிய வேகத்தில் இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்து நாசமானது.
சபரிமலை; மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் பிரவீன்குமாரின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஸ்ரீஹரி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.