திருப்பூரில் ரூ.1.78 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்; கேரளா போலீசார் அதிரடி

By Velmurugan s  |  First Published Jan 20, 2023, 5:51 PM IST

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,78,000 ரூபாய்  கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த கேரளா காவல் துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் பிரபு (39) என்பவர் வீட்டில் இன்று காலை கேரள மாநிலம் மறையூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சஜுபிஜின் மற்றும் காவலர்கள் அனுகுமார், சஜீஜன் உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேரளா மாநில காவல் துறையினரின் விசாரணை குறித்து அருகில் வசிப்பவர்கள் உடனடியாக குமரலிங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது

Tap to resize

Latest Videos

தமிழக காவல் துறையினர் இது குறித்து விசாரித்த போது கடந்த வாரம் கேரளாவில் கள்ள நோட்டு வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் சாணரப்பட்டி பகுதியைச் சார்ந்த அழகர் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மூன்று  நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் என்பவரை கேரள தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். 

தொடர்ந்து ஹக்கீம் அளித்த தகவலின் பெயரில் கொழுமம் பகுதியில் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பிரபு என்பவரை இன்று அதிகாலை வீட்டில் வைத்து கைது செய்த கேரளா தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சிடும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

விரட்டப்பட்டது தெலங்கானாவில், வீராப்பு காட்டுவது புதுவையிலா? தமிழிசைக்கு எதிரான போஸ்டரால் சர்ச்சை

அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ள நோட்டு அச்சடித்த  சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யபட்டு கேரளா சிறையில் உள்ள நிலையில் இன்னும் பல குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் கேரளா காவல் துறையினர் தெரிவித்தனர். கள்ள நோட்டு கும்பல் கிராமப்புறங்களில் தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த சம்பவம் கிராமப் பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!