அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது; மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

By Velmurugan s  |  First Published Jan 21, 2023, 5:40 PM IST

கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு உலகமே நம்மை உற்று நோக்குகிறது. அடுத்து வரவுள்ள 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது. மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு தற்போதிலிருந்தே திட்டங்களை வகுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின்(ஏபிவிபி) 28 வது மாநில மாநாடு வையத்தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம் என்ற தலைப்பின் கீழ் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீத சபாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்திய பிரதமர் என்ன சொல்கிறார் என்பதை உலகம் உற்று நோக்குகிறது. உக்ரைன் போர் முனையில் இருந்து 20 ஆயிரம் மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். இதன் மூலம் அந்நாடுகளுடன் எந்த அளவுக்கு சுமூகமான உறவு வைத்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Tap to resize

Latest Videos

சிவனாக ரங்கசாமி, முருகனாக நமச்சிவாயம்; புதுவையில் நன்றிக்கடன் செலுத்திய ஊழியர்கள்

கடந்த எட்டு ஆண்டுகளில் இங்கிலாந்தை பின் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது தேசமாக வந்துள்ளோம். இதற்கு சுயசார்பு பாரதம், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தான் காரணம். நாம் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறோம். உலகம் இந்தியாவை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. உலக அளவில் அதிக மனிதவளம் கொண்ட நாடு இந்தியா. எனவே இளைஞர்களின் திறனை வளர்த்து கொள்ள ஸ்கில் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே 80 ஆயிரம் ஸ்டாட்அப் கம்பெனிகள் இருக்கும் ஒரே நாடு நமது நாடு தான். 

பழனியில் 23 முதல் 27ம் தேதி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து - கோவில் நிர்வாகம்

தேசிய கல்வி கொள்கையை 2020ல் கொண்டு வந்தோம். இதுகுறித்து பெரிய பெரிய கல்வியாளர்களிடம் ஆலோசித்தோம். புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஊக்குவிக்கிறது. அது தமிழாக இருக்கலாம். தெலுங்காக இருக்கலாம். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 2047ல் நாம் 100வது சுதந்திர தினம் கொண்டாடுவோம். அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க இப்போதே அடித்தளம் இட்டு வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளை நீங்கள் தான் ஆளப்போகிறீர்கள். எனவே 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது. அனைவரும் இணைந்து வளர்ச்சிக்காக பங்களிக்க வேண்டும் என்றார்.

click me!