திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தற்போது ஏமாற்றுவதாக மதபோதகர் மீது மதுரையைச் சேர்ந்த இளம் பெண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்து தன்னை மத போதகர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருவதாகவும், தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாய் கூறி மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது
மேலும் தனக்கு தெரியாமல் மத போதகர் சாமுவேல் சென்னையைச் சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார். திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றி கொண்டு இருக்கிறார். மேலும் தான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளை பேசி தன்னை திட்டுகிறார்.
தன்னை பலமுறை சாமுவேல் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து வைத்து இருப்பதாகவும் ஏதாவது பேசினால் அந்தப் படங்களை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்..!
எனக்கு குடும்ப கஷ்டம் என கூறி ரூ.2 லட்சம் வரை தன்னிடம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் அவரது உறவினரான முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது தன்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். தன்னை போல் இனி வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது. தன்னை ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.