தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழி கொள்கையால் தான் தமிழர்கள் உலகெங்கும் சென்று பணியாற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில், நூலகத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நூலகத் துறையின் நிலையான வளர்ச்சியில் நவீன யுத்திகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பா வு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கருத்தரங்கு விழா மலரையும் வெளியிட்டு பேசுகையில், நூலகம் என்பது ஒரு பாடம் மட்டுமல்ல அனைத்து பாடங்களையும் ஒருங்கிணைத்த ஒரு அமைப்பு. கல்வித்துறையில் நூலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என பெயர் பெற்றுள்ளது என்றால் இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வியை வழங்கியதால்தான்.
திருப்பூரில் ரூ.1.78 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்; கேரளா போலீசார் அதிரடி
ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருநத்து. இந்தநிலையை மாற்றி அனைவருக்கும் சமமான கல்வி வழங்கி 200 ஆண்டுகளுக்கு முன் சமூக நீதிக்கு வித்திட்டவர்கள் இயேசு சபைதான். இங்குள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் 88 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கல்வி பயின்று பயன்பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வித்துறை மீது மிகுந்த அக்கறை கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் மதுரையில் நவீன வசதியுடன் நவீன முறையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதுபோன்று நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் அதுவும் பொருநை அருங்காட்சியகம் அமையும் பகுதிக்கு அருகில் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். அது விரைவில் நிறைவேறும்.
கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது
மேலும் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒன்று தாய்மொழி தமிழ். மற்றொன்று ஆங்கிலம். இரு மொழிக் கொள்கையை அண்ணா, பெரியார், காமராஜர், கருணாநிதி உள்ளிட்டோர் போராடி இரு மொழி கொள்கையை கொண்டுவந்தனர். இருமொழிக் கொள்கையால்தான் தமிழர்கள் உலகெங்கும் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.