தென்காசியில் அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி ரூபாய் 3 கோடி மோசடி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நிதி நிறுவன உரிமையாளரின் வீட்டை பூட்டி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கீழபாறையடி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. திருமணமான இவர் நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி மக்களிடம் பணத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் ஒரு வருட காலமாக பணத்தை திரும்ப தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் அவரது வீட்டை பூட்டி வீட்டின் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, அதிக வட்டிக்கு பணம் தருவதாக நம்பி, தங்கள் பகுதியில் உள்ள மக்கள் 80க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை அடகு வைத்தும், குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த பணங்கள் என அனைத்தையும் செலுத்தி உள்ளோம். தங்கள் பகுதியில் மட்டும் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்
இந்நிலையில் வட்டியும் தரவி்ல்லை, அசலும் திரும்பத் தரவில்லை. இது தொடர்பாக ஆறுமுகசாமியிடம் கேட்கும் போது உரிய பதிலும் அளிப்பதாக தெரியவில்லை. வேறு வழியின்றி அவரது வீடை பூட்டி முற்றுகையிட்டுள்ளோம். தங்களுடைய பணம் கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.