சினிமாவை மிஞ்சும் சம்பவம்! காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்! இறுதியில் நடந்தது என்ன?

Published : Feb 21, 2025, 02:56 PM ISTUpdated : Feb 21, 2025, 03:24 PM IST
சினிமாவை மிஞ்சும் சம்பவம்! காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்! இறுதியில் நடந்தது என்ன?

சுருக்கம்

நெல்லை அருகே ஆசிரியை ஒருவரை செல்போன் கடைக்காரர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஆசிரியை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் ராஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (38). இவர் அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கும், ராஜூவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்த இளம்பெண் தச்சநல்லூர் பகுதியில் உள்ள வேறொரு தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த பெண், ராஜூவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அவரிடம் பல முறை பேச முயற்சித்தும் முடியவில்லை. இதனால், ராஜூ ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்த பெண் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ராஜூ, தானும் வீட்டிற்கு செல்வதாகவும், தன்னுடன் காரில் வருமாறும் அந்த பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். பின்னர் பலவந்தமாக அவரை தனது காரில் ராஜூ அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! மார்ச் 4ம் தேதி விடுமுறை!

அப்போது கார், வீட்டிற்கு செல்லாமல் கன்னியாகுமரியை நோக்கி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ராஜூவிடம் கேட்டு அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பெண்ணிடம் ராஜூ பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக ராஜூவிடம் இருந்து தப்பித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க: அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

இந்த புகாரை அடுத்து  பெண்ணை கடத்துதல், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜூவை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியையை ராஜூ ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவரை காரில் கடத்தியதும் தெரிய வந்தது. காதலை ஏற்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியை சினிமா பாணியில் காரில் கடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.