விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருதாகவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்த கால்வாய் தூர்வாரும் பணிகளை பருவ மழைக்கு முன்னர் முடித்து தர வேண்டியும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான கால்வாய்களில் ஒன்றான பாளையங்கால்வாய் தூர்வாரும் பணி தற்போது மந்தகதியில் நடந்து வருகிறது. அதே சமயம் சாலை விரிவாக்க பணிக்காக கால்வாய் பகுதிகள் பெருமளவில் மணல் நிரப்பி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்து, இஸ்லாம் போன்று ஆல்கஹாலிக் என்ற சமூகம் உருவாகும்; காந்தியவாதிகள் எச்சரிக்கை
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பிரதான அணைகளில் இருந்து பாசன வசதிக்காக பயன்படுத்தப்படும் கால்வாய்கள் பருவமழைக்கு முன்னர் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து பல நாட்களாகிவிட்டது. ஆனால், தூர்வாரும் பணிகள் விரைவுப்படுத்தப்படாமல் இருந்து வருவதாக குற்றம் சாட்டியும், கால்வாய்களில் குப்பை கழிவு கொட்டப்பட்டு விவசாயத்திற்கு கால்வாயை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியில் விவசாய பயன்பாட்டிற்காக உரம் இடுபொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது
இதனை தொடர்ந்து அவர்களை அப்பகுதியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தி, பருவமழைக்கும் முன்னர் பாசன வசதிக்காக நீர் செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.