குண்டு வீச மாட்டோம்.. பாட்டிலில் பெட்ரோல் வேண்டும்.. விவசாயிகள் போராட்டம்

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 4:14 PM IST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சிலர் விவசாயப் பணிகளுக்கு பாட்டிலில் பெட்ரோல் வழங்க பெட்ரோல் நிலையங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 


பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்ப்பின் உச்சமாக பல பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கேள்வி எழத்தொடங்கியது. இந்த கேள்விக்கு வலுசேர்க்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார்.

சென்னையில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய பெண் கைது; ரூ.5.75 லட்சம் கொகைன் பறிமுதல்

Tap to resize

Latest Videos

undefined

அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் நிலையஙங்களில் கேன்கள், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கப்படுவது கிடையாது.

நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழக விவசாய பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்த “மனுவில் விவசாய பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து பெட்ரோல் பங்க் செல்வதற்கு சுமார் 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளதாகவும், மருந்து அடிக்கும் இயந்திரத்தை கொண்டு சென்று பெட்ரோல் வாங்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. 

சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை மருந்து அடிக்கும் இயந்திரத்தை டிராக்டர் மூலம் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள சூழலால் டிராக்டருக்கும் டீசல் போன்ற செலவுகள் இருப்பதால் விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாய பணிக்கான தேவைகளுக்கு பெட்ரோல் டீசல் ஆகியவை உழவர் அட்டைகளை காட்டினால் கேன்களில் வழங்க ஏற்பாடு செய்யவும் அந்த மனு மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டத்தின் போது விவசாயிகள் சிலர் நாங்கள் குண்டு போட மாட்டோம் விவசாயப் பணிக்கு தான் பெட்ரோல் கேட்கிறோம் என்று முனுமுனுத்தனர். 

click me!