திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் திடீரென நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் மங்களா குடியிருப்பு பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பஜனை மட தெரு, பிஜிலி தெரு, பங்களா தெரு, உள்ளிட்ட தெருக்களுக்கு மட்டும் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் சரிவர வராமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது குடிநீர் வந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத அளவில் மோசமாக இருப்பதாகவும் கூறி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய பெண் கைது; ரூ.5.75 லட்சம் கொகைன் பறிமுதல்
undefined
மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நெல்லை தச்சநல்லூர் மதுரை பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் வராமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறிய பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தச்சநல்லூர் உதவி ஆணையாளர் லெனின் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பெண்கள் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வழங்க இயலவில்லை என அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் விளக்கம் அளித்தனர்.
நீலகிரியில் பைக்கிற்கு பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்
உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி மினி ஜெசிபி உதவியுடன் குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் நெல்லை மதுரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது.