நெல்லை டவுண் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்கள் தீயில் கருகிய நாசமாகியுள்ளது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுண் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்கள் தீயில் கருகிய நாசமாகியுள்ளது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் அருகே தென்பத்து கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது, இங்கு கிராம நிர்வாக அலுவலராக ஏசுராஜன் மற்றும் தலையாரியாக இசக்கி பணியாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் அலுவலகத்தில் டேபிளில் வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஏசு ராஜன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் டவுண் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், முதல்கட்ட விசாரணையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகில் உள்ள குப்பைகள் தீ பிடித்தததில் அலுவலகத்திற்குள் தீ பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் மர்ம நபர்கள் யாரேனும் இந்த செயலை செய்தார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது தீயில் கருகி நாசமானது என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிபத்து சம்பவத்தால் அப்பகுதியில் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.