பஞ்சாப் இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக வீரரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் தேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்கு 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
இதை அடுத்து சம்பவம் நிகழ்ந்த பதிண்டா ராணுவ முகாம், மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 பேரில் ஒருவர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்துள்ளது.
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகேஷ், காலையில் மாட்டிற்கு தீவனம் வைப்பது தோட்ட வேலை செய்வது என அனைத்து பணிகளையும் முடித்து அதன் பிறகு, ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை செய்து வந்துள்ளார். தனது 19 ஆவது வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவர் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுப்புத் தெரிவித்த உறவினர்கள் உள்பட கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரது பாதிப்பு ஏற்பட்டது.
கோவையில் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ. 6 கோடியில் பணம், நகை, வைர ஆபரணங்களால் அம்மனுக்கு அலங்காரம்!