என் பொண்டாட்டி, குழந்தையே போயிடுச்சு.. இந்த உலகத்துல எனக்கு என்ன வேலை! வேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!

Published : Mar 22, 2023, 11:44 AM IST
என் பொண்டாட்டி, குழந்தையே போயிடுச்சு.. இந்த உலகத்துல எனக்கு என்ன வேலை! வேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!

சுருக்கம்

தேனி மாவட்டம் கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஆசைபாண்டியன் என்பவரது மகன் ராஜ்குமார்(23). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பூரில் தன்னுடன் பணிபுரியும் அந்தோணியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரசவத்தின் போது காதல் மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஆசைபாண்டியன் என்பவரது மகன் ராஜ்குமார்(23). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பூரில் தன்னுடன் பணிபுரியும் அந்தோணியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில். கடந்த 17ம் தேதி அந்தோணியம்மாள் பிரசவத்திற்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவத்தின் போது எதிர்பாராத விதமாக அந்தோணியம்மாள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது. 

இதனையடுத்து, அந்தோணியம்மாள் மற்றும் குழந்தை இருவரையும் தேனி மாவட்டம் தேவாரத்தில் நல்லடக்கம் செய்தனர். மனைவி இறந்த துக்கத்தில் தனிமையில் ராஜ்குமார் இருந்தார் ஏதாவது விபரீத முடிவை எடுத்துவிடுவார் என்பதால் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.  இந்நிலையில் கம்பம் வந்ததிலிருந்து ராஜ்குமார் தனது மனைவியின் நினைவாகவே இருந்துதுள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்ற குடும்பத்தினர் வீட்டில் வந்து பார்த்த போது மகன் உடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த மனைவி பிரசவத்தின் போது உயிரிழந்த வேதனை தாங்கா முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
அட பாவிங்களா! ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு கணவர் போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!